பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்காலை வீழ்த்தியது டெல்லி + "||" + Pro Kabaddi: Benghal was dropped New Delhi

புரோ கபடி: பெங்காலை வீழ்த்தியது டெல்லி

புரோ கபடி: பெங்காலை வீழ்த்தியது டெல்லி
6–வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 126–வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, தபாங் டெல்லியை சந்தித்தது.

கொல்கத்தா,

6–வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 126–வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, தபாங் டெல்லியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் டெல்லி அணி 20–14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சரிவில் இருந்து மீண்ட பெங்கால் அணியினர் ஒரு நிமிடம் எஞ்சி இருந்த போது ஆட்டத்தை 31–31 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தனர். அப்போது ரைடுக்கு சென்ற தபாங் டெல்லி வீரர் மிராஜ் ஷேக், பெங்கால் அணியின் மூன்று வீரர்களை அவுட் செய்ததுடன், ஆல்–அவுட்டும் ஆக்கி 5 புள்ளிகளை சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து மேலும் ஒரு புள்ளி அந்த அணிக்கு கிடைத்தது.

முடிவில் தபாங் டெல்லி அணி 37–31 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை சாய்த்தது. தனது கடைசி லீக்கில் ஆடிய டெல்லி அணி 11–வது வெற்றியை ருசித்ததுடன் ஏற்கனவே பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.