பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம் + "||" + National Army Volleyball in the quater final Meet the services team, Tamilnadu

தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம்

தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம்
67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை,

67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கால்இறுதிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி 20–25, 25–16, 25–16, 25–21 என்ற செட் கணக்கில் உத்தரகாண்டையும், பெண்கள் பிரிவில் அரியானா 25–17, 25–14, 25–14 என்ற நேர் செட்டில் உத்தரபிரதேசத்தையும் தோற்கடித்தது.

ஆண்கள் பிரிவில் இன்று நடக்கும் கால்இறுதியில் தமிழக அணி, சர்வீசஸ் அணியுடன் மோதுகிறது. பெண்கள் பிரிவில் தமிழக அணி கால்இறுதியில் மராட்டியத்தை நாளை எதிர்கொள்கிறது.