பிற விளையாட்டு

விளையாட்டு நட்சத்திரங்கள் சரத்கமல், கம்பீர், அஜய் தாகூர் உள்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது + "||" + Game Stars Sarath Kamal, Gambir, Ajay Thakur Padma Shri award for 7 people

விளையாட்டு நட்சத்திரங்கள் சரத்கமல், கம்பீர், அஜய் தாகூர் உள்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

விளையாட்டு நட்சத்திரங்கள் சரத்கமல், கம்பீர், அஜய் தாகூர் உள்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது
மத்திய அரசு நேற்றிரவு அறிவித்த பத்ம விருது பெறுவோர் பட்டியலில் 8 விளையாட்டு பிரபலங்களும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

புதுடெல்லி, 

மத்திய அரசு நேற்றிரவு அறிவித்த பத்ம விருது பெறுவோர் பட்டியலில் 8 விளையாட்டு பிரபலங்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதே போல் இரண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவரான கவுதம் கம்பீர், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், செஸ் வீராங்கனை ஹரிகா, வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி, கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். மலையேற்றத்தில் பல சாதனைகள் படைத்திருக்கும் உத்தரகாண்டை சேர்ந்த வீராங்கனை பச்சேந்திரி பாலுக்கு பத்ம பூ‌ஷண் விருது வழங்கப்படுகிறது.