மாநில இளையோர் தடகளம்: 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வசந்த், ஹேமலதா முதலிடம்


மாநில இளையோர் தடகளம்: 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வசந்த், ஹேமலதா முதலிடம்
x
தினத்தந்தி 25 Jan 2019 9:30 PM GMT (Updated: 25 Jan 2019 8:40 PM GMT)

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில இளையோர் (18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை, 

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில இளையோர் (18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெல்லை வீரர் சதீஷ்குமாரும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் அருண் கிருஷ்ணாவும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் அரவிந்தும், வட்டு எறிதலில் நெல்லை வீரர் குமாரும் முதலிடத்தை பிடித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் ஜாய் அலெக்சும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோவை தடகள கிளப் வீரர் ஆதித்யனும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் அசத்துல்லாவும், குண்டு எறிதலில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் செல்வ கணேசும், வட்டு எறிதலில் டெல்டா தடகள கிளப் வீரர் சுரேஷ்குமாரும், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. வீரர் வசந்தும் முதலிடத்தை கைப்பற்றினார்கள்.

பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீராங் கனை ஜெயா பெனிஷாவும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீராங் கனை கோப்பெரும் தேவியும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீராங் கனை ஐஸ்வர்யாவும், குண்டு எறிதலில் கோல்டு குயஸ்ட் வீராங்கனை இலக்யாவும் முதலிடத்தை தனதாக்கினார்கள்.

18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அபிதாவும் (திருவண்ணாமலை), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரோக்கிய எப்சிபாவும் (எஸ்.டி.ஏ.டி), டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் பூஜிதாவும் (எஸ்.டி.ஏ.டி), குண்டு எறிதலில் ஷர்மிளாவும் (மினு ஸ்போர்ட்ஸ்), 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹேமலதாவும் (திருவண்ணாமலை) தங்கப்பதக்கம் வென்றனர்.

இன்று கடைசி நாள் போட்டி நடக்கிறது.

Next Story