புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணிக்கு 5–வது வெற்றி


புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணிக்கு 5–வது வெற்றி
x
தினத்தந்தி 13 Feb 2019 9:30 PM GMT (Updated: 13 Feb 2019 8:51 PM GMT)

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்–ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. இதில் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்ட கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15–14, 11–15, 15–11, 15–9, 15–8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 5–வது வெற்றியை ருசித்த கோழிக்கோடு அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியது. 3–வது ஆட்டத்தில் ஆடிய ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணி சந்தித்த 3–வது தோல்வி இத

கொச்சி, 

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்–ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. இதில் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்ட கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15–14, 11–15, 15–11, 15–9, 15–8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 5–வது வெற்றியை ருசித்த கோழிக்கோடு அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியது. 3–வது ஆட்டத்தில் ஆடிய ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணி சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும்.

இந்த போட்டி தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். சென்னை நேரு உள்விளயாட்டு அரங்கில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் 13–வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்–யு மும்பா வாலி (மும்பை) அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story