பிற விளையாட்டு

புரோ கைப்பந்து போட்டி மும்பையிடம் தோற்றது சென்னை அணி + "||" + Pro Volleyball Match Chennai lost to Chennai

புரோ கைப்பந்து போட்டி மும்பையிடம் தோற்றது சென்னை அணி

புரோ கைப்பந்து போட்டி மும்பையிடம் தோற்றது சென்னை அணி
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது.

சென்னை, 

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2–வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13–வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை) எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தோடு களம் புகுந்த சென்னை அணி தடுமாறியது. முதல் 3 செட்டுகளையும் வரிசையாக கோட்டை விட்ட சென்னை அணி கடைசி இரு செட்டை மட்டும் வசப்படுத்தி ஆறுதல் அளித்தது. முடிவில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 14–15, 8–15, 10–15, 15–10, 15–10 என்ற செட் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

4–வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும். அதே சமயம் 3 தோல்விகளுக்கு பிறகு மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சை சந்திக்கிறது. இது தான் சென்னை அணிக்கு கடைசி லீக் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். தோற்றால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை.