பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thuligal in sports news

துளிகள்

துளிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் கேப்டன் ரணதுங்கா தோல்வி அடைந்தார்.
* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 82-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 10-வது வெற்றியை பதிவு செய்தது.

* ராய்ப்பூரில் நடந்த தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 5.92 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய இளையோர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்.


* சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் இந்தூரில் நடந்த ஒரு ஆட்டத்தில் (சி பிரிவு) மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 147 ரன்கள் (55 பந்து, 7 பவுண்டரி, 15 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் உள்ளூர், சர்வதேசம் உள்பட ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சிறப்பை ஸ்ரேயாஸ் அய்யர் படைத்தார். இதற்கு முன்பு ரிஷாப் பான்ட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு 128 ரன்கள் (ஐதராபாத் சன்ரைசர்சுக்கு எதிராக) எடுத்ததே இந்தியர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்தியர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் (15 சிக்சர்) படைத்தார். தொடர்ந்து ஆடிய சிக்கிம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.