பிற விளையாட்டு

முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4¼ கோடி பரிசுத்தொகை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார் + "||" + Those who have won the state competition Rs4 crore is a gift

முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4¼ கோடி பரிசுத்தொகை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4¼ கோடி பரிசுத்தொகை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை திட்டத்தில் சேர்ப்பதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

சென்னை,

2018–19–ம் ஆண்டுக்கான முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை திட்டத்தில் சேர்ப்பதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் 189 பேருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2–வது இடம் பெற்ற 189 பேருக்கு ரூ.75 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற 189 பேருக்கு ரூ.50 ஆயிரமும் என ஆக மொத்தம் ரூபாய் 4 கோடியே, 24 லட்சத்து 75 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அத்துடன் சர்வதேச போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு 37 வீரர்–வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணையை அவர் வழங்கினார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் சந்திரசேகர் சாகமூரி, பொதுமேலாளர் கே.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.