பிற விளையாட்டு

எஸ்.டி.ஏ.டி. ஆலோசனை குழு உறுப்பினராக ஸ்ரீகாந்த், ஐசரி கணேஷ் உள்பட 25 பேர் நியமனம் + "||" + SDAT As a member of the advisory board including, Srikanth, Isari Ganesh Appointed 25 people

எஸ்.டி.ஏ.டி. ஆலோசனை குழு உறுப்பினராக ஸ்ரீகாந்த், ஐசரி கணேஷ் உள்பட 25 பேர் நியமனம்

எஸ்.டி.ஏ.டி. ஆலோசனை குழு உறுப்பினராக ஸ்ரீகாந்த், ஐசரி கணேஷ் உள்பட 25 பேர் நியமனம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) ஆலோசனை குழு உறுப்பினர்களாக 25 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ், வேலம்மாள் கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம். வேல்முருகன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் ராஜ் சத்யன், ஆதவ் அர்ஜூனா, செந்தில் தியாகராஜன், ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், சத்யபாமா பல்கலைக்கழக இணைவேந்தர் மரிய ஜீனா ஜான்சன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அமுதா, முன்னாள் சர்வதேச நீச்சல் வீரர் அக்னீஸ்வரன் உள்பட 25 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.