பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thuligal in sports news

துளிகள்

துளிகள்
* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் சீருடையில் தங்களது பெயர் மற்றும் எண்களை பொறித்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்த சலுகையை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சார்ஜாவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. ஹாரிஸ் சோகைல் (101 ரன்) சதம் அடித்தார். பின்னர் 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது.


* உலக கோப்பை அணிக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்று இலங்கை தேர்வு குழு நிர்ப்பந்தித்து இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன்னால் முதல் 6 ஆட்டங்களில் ஆட இயலாது என்று வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.

* அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-7 (3), 4-6 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ஜாமி முனாரிடம் வீழ்ந்தார்.

* உலக கோப்பை போட்டிக்கு முழு உடல்தகுதியுடன் புத்துணர்ச்சியோடு இருப்பதற்காக ஐ.பி.எல். தொடரில் ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் தான் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலி நேற்று தெரிவித்தார். ‘ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு எல்லா வகையிலும் முயற்சிக்கிறோம். அதற்காக ஐ.பி.எல். கோப்பை வெற்றி-தோல்வியை வைத்து என்னை மதிப்பீடு செய்தால் அது பற்றி கவலையில்லை’ என்றும் கோலி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
2. துளிகள்
முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
3. துளிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.
4. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.
5. துளிகள்
* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.