பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து, காஷ்யப் + "||" + Indian Open Badminton: In the semi-finals Sindhu, Kashyap

இந்திய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து, காஷ்யப்

இந்திய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து, காஷ்யப்
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–16, 21–11 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–23, 21–11, 21–19 என்ற செட் கணக்கில் சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 10–21, 16–21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டோர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–19, 22–20 என்ற நேர்செட்டில் மியா பிச்பெல்ட்டை (டென்மார்க்) சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.