பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Indian Open Badminton: Indian player Srikanth qualifies for final

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 16–21, 21–14, 21–19 என்ற செட் கணக்கில் ஹூவாங் யுஜியாங்கை (சீனா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 11–21, 17–21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டோர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு நடையை கட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21–23, 18–21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.