பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து களம் இறங்குகிறார்கள் + "||" + Singapore Open Badminton Saina Sindhu

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து களம் இறங்குகிறார்கள்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து களம் இறங்குகிறார்கள்
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.
சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த தகுதி சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் காஷ்யப், முக்தா ஆகியோர் வெற்றி பெற்று பிரதான சுற்றை எட்டினர்.


இன்றைய தினம் இந்திய நட்சத்திர மங்கைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து களம் இறங்குகிறார்கள்.

சிந்து தனது முதல் சுற்றில் லையனி அலெஸ்சாண்ட்டோ மைனகியையும் (இந்தோனேஷியா), சாய்னா நேவால், இந்தோனேஷியாவின் சுசான்டோவுடனும் மோதுகிறார்கள். இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்தும் முதல் சுற்றில் இன்று ஆடுகிறார்.