பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

*மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவின் தரவரிசையில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். 25 வயதான பஜ்ரங் பூனியா ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

*உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத அம்பத்தி ராயுடு, விஜய் சங்கரை மறைமுகமாக டுவிட்டரில் சாடியிருந்தார். இந்த வி‌ஷயத்தில் அவர் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்காது என்று தெரிகிறது. ‘இந்த விவகாரம் எங்களது கவனத்துக்கு வந்தது. உணர்ச்சி வேகத்தில் சில வார்த்தைகளை ராயுடு சொல்லி விட்டார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

*இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் சரியான கலவையில் இந்திய அணி அமைந்துள்ளது. விக்கெட் கீப்பராக இருக்கும் டோனி முதல் பந்து முதல் 300–வது பந்து வரை (50 ஓவர் போட்டி) ஆட்டத்தின் போக்கை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர். அவர் விக்கெட் கீப்பராக இருப்பதை சவுகரியம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அவரிடம் இருந்து ஆட்டம் தொடர்பான நுணுக்கமான தகவல்களை பெறுவதில் நான் அதிர்ஷ்டசாலி. மொத்தத்தில் அணி வியூகங்கள் தொடர்பாக அணி நிர்வாகம் மற்றும் டோனி, ரோகித் சர்மா ஆகியோருடன் நான் ஆலோசிக்கிறேன். ஒரு காலத்தில் டோனியின் கேப்டன்ஷிப்பில் நான் ஆடிய போது கடினமான கட்டங்களில் எனக்கு பக்கபலமாக இருந்தார். 3–வது பேட்டிங் வரிசையில் விளையாட வாய்ப்பு வழங்கினார். அந்த விசுவாசத்தை அவரிடம் இப்போது காட்டுகிறேன். என்னை பொறுத்தவரை விசுவாசம் மிகவும் முக்கியமானது’ என்றார்.

*தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் அளித்த ஒரு பேட்டியில், ‘மிகுந்த எதிர்பார்ப்புடன் நாங்கள் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கிறோம். வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றால் அங்கு போக வேண்டிய தேவையே இல்லை. எங்கள் அணியில் அற்புதமான வீரர்கள் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கலக்கி வருகிறார். தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் முதல் 11–வது வரிசை வீரர் வரை அனைவரும் எங்கள் அணியில் மேட்ச் வின்னர்கள் தான். கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால், எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு துளிகள்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த ஓட்டிஸ் கிப்சனின் (வெஸ்ட் இண்டீஸ்) ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.
2. துளிகள்
*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
3. துளிகள்
முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
4. துளிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.
5. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...