பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை: சதீஷ்குமார், சோனியா கால்இறுதிக்கு தகுதி + "||" + Asian Boxing: Satish Kumar, Sonia to qualify for quarter-final

ஆசிய குத்துச்சண்டை: சதீஷ்குமார், சோனியா கால்இறுதிக்கு தகுதி

ஆசிய குத்துச்சண்டை: சதீஷ்குமார், சோனியா கால்இறுதிக்கு தகுதி
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.

பாங்காக்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 91 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் நேரடியாக 2–வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர் சதீஷ்குமார் 5–0 என்ற கணக்கில் ஈரான் வீரர் இம்ரான் ரமிஜனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் 2–வது சுற்றில் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சோனியா சாஹல் 5–0 என்ற கணக்கில் வியட்நாம் வீராங்கனை உயான் டு நாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.