ஆசிய தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் ஹிமா தாஸ் ஏமாற்றம்


ஆசிய தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் ஹிமா தாஸ் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 April 2019 10:00 PM GMT (Updated: 21 April 2019 8:16 PM GMT)

23–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நேற்று தொடங்கியது.

தோகா, 

23–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நேற்று தொடங்கியது. இதில் 43 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ் கலந்து கொண்டார். ஜூனியர் உலக சாம்பியனான ஹிமா தாஸ் எதிர்பாராத விதமாக முதுகுவலியால் பாதிக்கப்பட்டு, தகுதி சுற்றை நிறைவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனால் அடுத்து வரும் தொடர் ஓட்டத்தில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பயப்படும்படி இல்லை. ஓரிரு நாட்களில் குணமடைந்து விடுவார் என்று அணியின் உதவி பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னுராணி 60.22 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். சீனாவின் லு ஹூஹூய் தங்கப்பதக்கத்தை (65.83 மீட்டர் தூரம் வீசினார்) கைப்பற்றினார். இதே போல் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 15 நிமிடம் 36.03 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். முதல் 2 இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.


Next Story