பிற விளையாட்டு

துளிகள் + "||" + Sports thuligal news

துளிகள்

துளிகள்
ஒரு நாள் போட்டி அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில் நமிபியா 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பணியாற்றிய இரண்டு நடுவர்களில் ஒருவர், கிளாரி போலோசக் என்ற பெண். 31 வயதான கிளாரி போலோசக் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
* இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைப்பது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது.


* இந்திய கால்பந்து சங்கம் சார்பில் ஜெ.ஜெ.லால்பெகுலா, குர்பிரீத்சிங் சந்து ஆகியோரின் பெயர் அர்ஜூனா விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

* ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கிரேக்கோ-ரோமன் பந்தயத்தின் 77 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 0-8 என்ற கணக்கில் ஹயேன்வூ கிம்மிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. மற்றொரு இந்திய வீரர் சுனில் குமாரும் (87 கிலோ) இறுதிஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

* தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் டையஸ் (பெங்களூரு) அணி 6-0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 9-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை வீழ்த்தியது. லீக் ஆட்டங்கள் முடிவில் எஸ்.டி.ஏ.டி. (கோவில்பட்டி), இந்தியன் வங்கி, டையஸ் (பெங்களூரு), சென்னை மாநகர போலீஸ், சென்னை ஆக்கி சங்கம், ஜி.எஸ்.டி., வருமான வரி, லயோலா அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. நாளை கால்இறுதி ஆட்டம் நடக்கிறது.

* ஐ.சி.சி. உலக கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டத்தில் (டிவிசன்2) நமிபியா-ஓமன் அணிகள் நேற்று நமிபியாவில் உள்ள வின்டோக் நகரில் சந்தித்தன. அதிகாரபூர்வ ஒரு நாள் போட்டி அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில் நமிபியா 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பணியாற்றிய இரண்டு நடுவர்களில் ஒருவர், கிளாரி போலோசக் என்ற பெண். 31 வயதான கிளாரி போலோசக் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நடுவராக செயல்பட்ட முதல் பெண் நடுவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.
2. துளிகள்
* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
3. துளிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
4. துளிகள்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், பிரான்சை சேர்ந்த பாரிஸ் சைன்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
5. துளிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.