பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து ஆஸ்கர் ஆப்கன் நீக்கப்பட்டு குல்பதின் நைப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜி வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது வலது கை பெருவிரலில் காயம் அடைந்தார். அவருடைய காயம் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்–ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

* வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான 85 வயது சேமர் நர்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சேமர் நர்ஸ் 1960–ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக 29 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நமது அணியில் சிறந்த பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர். சமீப காலங்களில் நமது அணியின் பீல்டிங் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறது. நமது அணி உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் ஏமாற்றம் அடைவேன். இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன். உலக கோப்பை போட்டியில் விராட்கோலி சிறப்பாக செயல்படுவார் என கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 3–வது அணியாக இங்கிலாந்து கலந்து கொள்கிறது.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து ஆஸ்கர் ஆப்கன் நீக்கப்பட்டு குல்பதின் நைப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் தவ்லாத் கான் அஹ்மத்ஜாய் அளித்த பேட்டியில், ‘ஆஸ்கர் அல்லது வேறு யாரும் கேப்டனாக இருந்தாலும் இந்த தருணத்தில் எங்கள் அணியால் உலக கோப்பையை வெல்ல முடியாது. இந்த உலக கோப்பை போட்டியை நினைத்து நாங்கள் கேப்டனை மாற்றம் செய்யவில்லை. 2023–ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு நாங்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இதனை ரஷித் கான் உள்ளிட்ட வீரர்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள்’ என்று தெரிவித்தார்.