பிற விளையாட்டு

உலக தொடர் ஓட்டம்: இந்திய அணிகள் ஏமாற்றம் + "||" + World Series flow: Indian teams are disappointed

உலக தொடர் ஓட்டம்: இந்திய அணிகள் ஏமாற்றம்

உலக தொடர் ஓட்டம்: இந்திய அணிகள் ஏமாற்றம்
உலக தொடர் ஓட்டப்பந்தய போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

யோகோஹமா, 

உலக தொடர் ஓட்டப்பந்தய போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், பூவம்மா, சரிதாபென், விஸ்மயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 31.93 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 17–வது இடத்தையே பெற்றது. இதேபோல் ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் குன்கு முகமது, ஜிது பாபி, ஜீவன் சுரேஷ், முகமது அனாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17–வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது. 400 மீட்டர் தொடர் ஓட்ட கலப்பு பிரிவில் இந்திய அணி 15–வது இடம் பெற்றது. இதனால் இந்திய அணிகள் தோகாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.