துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 12 May 2019 9:00 PM GMT (Updated: 12 May 2019 8:51 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்க அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தையும் (30–ந் தேதி), 2–வது ஆட்டத்தில் வங்காளதேசத்தையும் (ஜூன் 2–ந் தேதி), 3–வது லீக் ஆட்டத்தில் இந்தியாவையும் (ஜூன் 5–ந் தேதி) சந்திக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா முதுகு வலி பிரச்சினை காரணமாக 2 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருந்த நிலையில் சொந்த நாடு திரும்பினார். ரபடா முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதாகவும், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு அவர் முழு உடல் தகுதியை எட்டுவார் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார். தற்போது அவர் தனது பெண் குழந்தைகளை வெளியரங்கத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில் அவர்கள் விரும்பினால் உள்ளரங்க போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததாகவும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 175–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, சீன வீராங்கனை யிங் யிங் டுயனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அங்கிதா ரெய்னா 3–6, 6–2, 2–6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story