பிற விளையாட்டு

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி வெற்றி + "||" + National basketball: Tamil Nadu team win

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி வெற்றி

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி வெற்றி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.
கோவை,

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி கோவையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. 5-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் கேரளா அணி 70-40 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 68-56 என்ற புள்ளி கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் தெலுங்கானா அணி 62-41 என்ற புள்ளி கணக்கில் உத்தரகாண்டை சாய்த்தது. பெண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா அணி 72-40 என்ற புள்ளி கணக்கில் சண்டிகார் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 68-31 என்ற புள்ளி கணக்கில் சத்தீஷ்கார் அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் தெலுங்கானா அணி 53-50 என்ற புள்ளி கணக்கில் பீகாரை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 52-36 என்ற புள்ளி கணக்கில் கர்நாடாகாவை சாய்த்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், கர்நாடகம், கேரளா, டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், சண்டிகார் ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் பஞ்சாப், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, கேரளா, மராட்டியம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், சண்டிகார், அரியானா ஆகிய அணிகளும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.