பிற விளையாட்டு

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + All India Junior Badminton: Gayatri Gopichand progress to quarter finals

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்
அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில், காயத்ரி கோபிசந்த் கால்இறுதிக்கு முன்னேறினார்.
சென்னை,

அகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தெலுங்கானா வீராங்கனை காயத்ரி கோபிசந்த் 22-20, 21-16 என்ற நேர்செட்டில் டெல்லி வீராங்கனை குஷி குப்தாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். தமிழக வீராங்கனைகள் நிவேதா, அக்‌ஷயா ஆறுமுகம் ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர்கள் சித்தார்த் குப்தா, ரித்விக் சஞ்சீவி, சதீஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.