பிற விளையாட்டு

லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற லிதுவேனியா வீரரின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்படுகிறது - ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் + "||" + London Olympics canoe silver medalist Jevgenij Shuklin disqualified for doping, set to be stripped of medal

லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற லிதுவேனியா வீரரின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்படுகிறது - ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்

லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற லிதுவேனியா வீரரின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்படுகிறது - ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால், லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற லிதுவேனியா வீரரின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட உள்ளது.
லாசானே,

2012-ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் தூர துடுப்பு படகு (கனோயிங்) தனிநபர் பிரிவில் லிதுவேனியா வீரர் ஜிவ்ஜெனிச் சுக்லின் வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்த போட்டியின் போது அவரிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஜிவ்ஜெனிச் சுக்லின் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கத்தை பறிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 33 வயதான ஜிவ்ஜெனிச் சுக்லினுக்கு விதிக்கப்பட வேண்டிய தடை காலம் குறித்து சர்வதேச கனோயிங் பெடரேஷன் முடிவு செய்யும்.