பிற விளையாட்டு

தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு + "||" + John Nicholson re-elected, As president of Tamil Nadu Swords Association

தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு
தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை,

தமிழ்நாடு வாள்சண்டை சங்கத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் (2019 முதல் 2023-ம் ஆண்டு வரை) சென்னையில் நேற்று நடந்தது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அக்பர் அலி நடத்தினார்.

இதில் சங்கத்தின் தலைவராக முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து நின்ற தனசேகரனை தோற்கடித்து 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத்தலைவராக செல்லத்துரையும், செயலாளராக வரதராஜனும், இணைச் செயலாளர்களாக அமிர்தராஜ், சங்கர், பொருளாளராக ருத்ரன், செயற்குழு உறுப்பினர்களாக காளிமுத்து, பொன்சீலன், சண்முகசுந்தரம், ராஜசல்லுசன், நாகராஜன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.