பிற விளையாட்டு

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை: இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் + "||" + ICC Ranking Test batsmen: Indian Captain Virat Kohli tops the list

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை: இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம்

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை: இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம்
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

* டோக்கியோவில் நேற்று தொடங்கிய ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதற்கிடையே இந்த போட்டியில் விளையாட இருந்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முழு உடல் தகுதியை எட்டாததால் கடைசி நேரத்தில் விலகி விட்டார்.

* ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (913 புள்ளி) 2-வது இடத்திலும், இந்தியாவின் புஜாரா (881 புள்ளி) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (857 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். டாப்-10 இடத்தில் இந்தியர்களில் ரவீந்திர ஜடேஜா (6-வது இடம்), அஸ்வின் (10-வது இடம்) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

* இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது. 4 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு நாளும் தலா 98 ஓவர்கள் வீசப்படும். இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

* புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.