பிற விளையாட்டு

புரோ கபடி: குஜராத் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி + "||" + Pro Kabaddi: Gujarat team wins hat trick

புரோ கபடி: குஜராத் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

புரோ கபடி: குஜராத் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு நடந்த 20–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் தபாங் டெல்லி அணி 14–11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பின்பாதியில் குஜராத் அணி சிறப்பாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வந்து முன்னிலை பெற்றது. அந்த முன்னிலையை குஜராத் அணி கடைசி வரை தக்க வைத்துக்கொண்டது. முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 31–26 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி தொடர்ச்சியாக 3–வது வெற்றியை (ஹாட்ரிக்) தனதாக்கியது. 4–வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்–உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), மும்பை (யூ மும்பா)–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.