பிற விளையாட்டு

பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + Volleyball tournament for school teams Happening in Chennai

பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது

பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 13 மற்றும் 14–ந் தேதிகளில் நடக்கிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 13 மற்றும் 14–ந் தேதிகளில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 10–ந் தேதிக்குள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் உள்ள சென்னை மாவட்ட கைப்பந்து சங்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.