பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சாய்னா, காஷ்யப் தோல்வி + "||" + Thailand Open Badminton: Saina, Kashyap lost in 2nd round

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சாய்னா, காஷ்யப் தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சாய்னா, காஷ்யப் தோல்வி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–16, 11–21, 14–21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை சயகா தகாஹஹியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 48 நிமிடம் நடந்தது. இதன் மூலம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–11, 16–21, 12–21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கோசித் பெட்பிரதாப்பிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 9–21, 14–21 என்ற நேர்செட்டில் சீனதைபேயின் சோடின் சென்னிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 17–21, 10–21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவிடம் தோல்வி கண்டார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–18, 21–19 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் சுபான்கர் தேயை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.