பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால் + "||" + Kidambi Srikanth, Parupalli Kashyap Follow Saina Nehwal Out of Thailand Open

தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால்

தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால்
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
தாய்லாந்து,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சர்வதேச பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் , ஜப்பானின் சயாகா டகாஹஷியை எதிர் கொண்டார். முதல் செட்டை 21-16 என கைப்பற்றிய சாய்னா நேவால், இரண்டாவது செட்டை 11-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 14-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். 

மொத்தம் 48 நிமிடங்கள் நீடித்த போட்டியில் சாய்னா நேவால் 21-16, 11-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.  பேட்மின்டன் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள சாய்னா நேவால், 12வது  இடத்தில்  உள்ள சயாகா டகாஹஷியிடம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-11, 16-21, 12-21 என தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 9-21, 14-21 என சீனதைபேயின் சோ டியன் சென்னிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.