பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பட்டம் வென்று சாதனை + "||" + Thailand Open Badminton: Indian couple achieve record

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பட்டம் வென்று சாதனை

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பட்டம் வென்று சாதனை
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி இணை 21–19, 18–21, 21–18 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான சீனாவின் லி ஜன் ஹூ– லி யூ சென் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நடந்தது.

ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடியினர் தங்களது பேட்மிண்டன் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய பட்டம் இதுவாகும். அத்துடன் ‘உலக டூர் சூப்பர்500’ வகை இந்த பேட்மிண்டன் தொடரில் மகுடம் சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர். தரவரிசையில் 16–வது இடத்தில் உள்ள சாத்விக்– சிராக் ஷெட்டி கூட்டணி இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் முறையாக டாப்–10 இடத்துக்குள் முன்னேறுகிறது. ‘‘நாங்கள் இதுவரை வென்றதிலேயே மிகப்பெரிய பட்டம் இது தான். அதுவும் உலக சாம்பியனை வீழ்த்தி இருக்கிறோம். மகிழ்ச்சியை என்னிடம் விவரிக்க வார்த்தைகளே இல்லை’ என்று சிராக் ஷெட்டி குறிப்பிட்டார்.