பிற விளையாட்டு

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’ + "||" + Hyderabad Open Badminton: Indian Player Sourabh Verma Champion

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’
ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஐதராபாத்,

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சிங்கப்பூர் வீரர் லோ கியான் யேவை சந்தித்தார். 52 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் தேசிய சாம்பியனான சவுரப் வர்மா 21-13, 14-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப் வர்மா ‘சூப்பர் 100 வகை’ பேட்மிண்டனில் வென்ற 3-வது பட்டம் இதுவாகும்.


இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி ஜோடி 17-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் கொரியாவின் பாக் ஹா நா- ஜங் கியங் இன் இணையிடம் வீழ்ந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக தடகளம்: இந்திய வீரர் ஸ்ரீசங்கர் ஏமாற்றம்
உலக தடகள போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீசங்கர் ஏமாற்றம் அளித்தார்.
2. உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி
உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வியடைந்தார்.
3. வியட்னாம் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’
வியட்னாம் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
4. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
5. பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்
பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயமடைந்தார்.