பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா + "||" + Pro Kabaddi: UP Yotha shocked Bangalore team

புரோ கபடி: பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா

புரோ கபடி: பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா
புரோ கபடி போட்டியில், பெங்களூரு அணிக்கு உ.பி.யோத்தா அணி அதிர்ச்சி அளித்தது.
ஆமதாபாத்,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டம் 29-29 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.


மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி முதலில் 5 புள்ளிகள் முன்னிலை வகித்தாலும் அதனை நீண்ட நேரம் தக்க வைக்க முடியவில்லை. உ.பி.யோத்தா அணி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து பெங்களூரு புல்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 15-15 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. பிற்பாதியில் உ.பி.யோத்தா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன் மீண்டும் ஒரு முறை பெங்களூரு புல்சை ‘ஆல்-அவுட்’ செய்தது. முடிவில் உ.பி.யோத்தா 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.

இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-புனே ஆட்டம் ‘டை’
புரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்-புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது.
2. புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி
புரோ கபடி லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
3. புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், அரியானா, பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.
4. புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.
5. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் 34-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.