பிற விளையாட்டு

புரோ கபடி லீக்:தமிழ் தலைவாஸ் 4-வது வெற்றியை பெறுமா?ஜெய்ப்பூர் அணியுடன் இன்று மோதல் + "||" + Pro Kabaddi League: Will Tamil Tiwas win 4th?

புரோ கபடி லீக்:தமிழ் தலைவாஸ் 4-வது வெற்றியை பெறுமா?ஜெய்ப்பூர் அணியுடன் இன்று மோதல்

புரோ கபடி லீக்:தமிழ் தலைவாஸ் 4-வது வெற்றியை பெறுமா?ஜெய்ப்பூர் அணியுடன் இன்று மோதல்
12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னை, 

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. புனேரி பால்டன் அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி, ஒரு ‘டை’ கண்டுள்ளது. நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டு இருக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் (இரவு 8.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் இந்த சீசனில் உள்ளூரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஏமாற்றமே அளித்தது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தோல்வி கண்டது. புனேரி பால்டனுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி ‘டை’ செய்தது. தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.