பிற விளையாட்டு

புரோ கபடி: டெல்லி அணி 10-வது வெற்றி + "||" + Pro Kabaddi: 10th win for Delhi team

புரோ கபடி: டெல்லி அணி 10-வது வெற்றி

புரோ கபடி: டெல்லி அணி 10-வது வெற்றி
புரோ கபடி போட்டியில் டெல்லி அணி 10-வது வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூரு,

7-வது புரோ கபடி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு அரங்கேறிய 73-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே டெல்லி அணி ஜெய்ப்பூரை ஆல்-அவுட் செய்தது. பதிலடியாக ஜெய்ப்பூர் அணியும் டெல்லியை ஆல்-அவுட் செய்து அசத்தியது. முதல் பாதியில் டெல்லி அணி 21-19 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டம் திரிலிங்காக நகர்ந்தது. இறுதியில் தபாங் டெல்லி 46-44 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது. டெல்லி வீரர் நவீன்குமார் ரைடு மூலம் 16 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். 12-வது ஆட்டத்தில் ஆடிய தபாங் டெல்லி அணி 10 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.


இதே போல் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரட்ஸ் இடையிலான ஆட்டத்திலும் அனல் பறந்தது. இதில் பெங்களூரு புல்ஸ் அணி 40-39 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை தோற்கடித்து 8-வது வெற்றியை ருசித்தது. அதே சமயம் 12-வது ஆட்டத்தில் ஆடிய முன்னாள் சாம்பியன் பாட்னாவுக்கு விழுந்த 9-வது அடி இதுவாகும். இன்று நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன் - மும்பை (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.