பிற விளையாட்டு

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது + "||" + In the Pro Kabaddi League series, the Tamil Thalaivas have bowed to Haryana Steelers

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சிடம் தோல்வியடைந்தது.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பந்தயத்தில் 55 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் மன்ஜீத் 0-8 என்ற புள்ளி கணக்கில் நடப்பு உலக சாம்பியனான அஜர்பைஜான் வீரர் எல்டானிஸ் அஜிலிடம் தோற்று வெளியேறினார்.


* புரோ கபடி லீக் தொடரில், புனேயில் நேற்றிரவு நடந்த 90-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது. 11-வது தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை முற்றிலும் இழந்து இருக்கிறது.

* விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஐதராபாத் அணியின் கேப்டனாக 33 வயதான அம்பத்தி ராயுடு நேற்று நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறுவதாக அறிவித்து, பிறகு அந்த முடிவை கைவிடுவதாக அம்பத்தி ராயுடு கூறியதால் அவருக்கு கேப்டன் பொறுப்பை ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் வழங்கியுள்ளது.

* விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நீடிக்கிறார். அணி விவரம் வருமாறு:- அபினவ் முகுந்த், எம்.விஜய், பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), எம்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சாய்கிஷோர், என்.ஜெகதீசன், டி.நடராஜன், கே.விக்னேஷ், எம்.முகமது, எம்.சித்தார்த், அபிஷேக் தன்வார், ஹரி நிஷாந்த், ஜெ.கவுசிக்.

* அரியானா விளையாட்டு பல்கலைக் கழகத்தின் வேந்தராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தர் கபில்தேவ் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்? பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
2. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
3. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.
4. புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி
புரோ கபடி: கடைசி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
5. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.