பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் + "||" + Indian players disappointed in World Wrestling

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்
உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ககஜஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 1-3 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவின் விக்டோர் நெம்சிடம் போராடி வீழ்ந்தார். 60 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் மனிஷ் 0-10 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள மால்டோவா வீரர் விக்டர் சிபானுவிடம் தோல்வி கண்டார். 130 கிலோ எடைப்பிரிவில் தகுதி சுற்றில் இந்திய வீரர் நவீன், பான் அமெரிக்கன் சாம்பியன் ஆஸ்கார் பினோ ஹின்ட்சை (கியூபா)சந்தித்தார். இதில் நவீன் 0-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். அவரை வீழ்த்திய ஆஸ்கார் பினோ ஹின்ட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் வெண்கலப்பதக்கம் வரை முன்னேற வாய்ப்புள்ள ரிபிசேஜ் பிரிவில் நவீனுக்கு மற்றொரு வாய்ப்பு கிட்டியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒப்பந்தத்தை மதித்து இந்திய வீரர்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும், ஒப்பந்தத்துக்கு அடிபணிந்தே அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
2. லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?
லடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை