சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி


சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி
x
தினத்தந்தி 21 Sep 2019 12:11 AM GMT (Updated: 21 Sep 2019 12:40 AM GMT)

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வியடைந்தார்.

சாங்ஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 6-21, 16-21 என்ற செட் கணக்கில் அந்தோணி சுனிசுகாவிடம் (இந்தோனேஷியா) போராடி தோற்று வெளியேறினார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Next Story