பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது + "||" + Tamil Thalaivas team's awful Continues

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது
புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடர்ந்து வருகிறது.
ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் அரங்கேறிய 101-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி.யோத்தாவை எதிர்கொண்டது. தொடக்கத்தில் 14-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் பிற்பாதியில் வழக்கம் போல் தள்ளாடியது. இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதுடன் பிடியையும் நழுவ விட்டது. முடிவில் உ.பி.யோத்தா அணி 42-22 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி 9-வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து அடிமேல் அடி வாங்கி வரும் தமிழ் தலைவாஸ் 12 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. முன்னதாக நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான திரிலிங்கான ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.


இன்றைய லீக் ஆட்டங்களில் மும்பை-குஜராத் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர்-பெங்கால் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.