பிற விளையாட்டு

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி: இந்திய ஆக்கி அணி அசத்தல் + "||" + Olympic qualifying tournament: Indian Hockey Team Win

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி: இந்திய ஆக்கி அணி அசத்தல்

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி: இந்திய ஆக்கி அணி அசத்தல்
ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில், பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆக்கி அணி வெற்றிபெற்றது.
ஆன்ட்வெர்ப்,

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அமித் ரோஹிதாஸ் 10-வது நிமிடத்திலும், சிம்ரன்ஜீத் சிங் 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த பயணத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, மீண்டும் பெல்ஜியத்துடன் மோதுகிறது.