பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா? + "||" + Women's World Boxing Tournament Starting Today: Will Mary Kom achieve again?

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா?

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா?
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்க உள்ளது. அதில் மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலன் உடே,

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் இன்று தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் 7-வது முறையாக மகுடம் சூடும் முனைப்புடன் களம் காணுகிறார். ஆனால் முந்தைய போட்டிகளில் மேரிகோம் 48 கிலோ பிரிவில் பிரமிக்க வைத்தார். ஆனால் அந்த பிரிவு ஒலிம்பிக் போட்டியில் இல்லாததால் மேரிகோம் இப்போது 51 கிலோ எடைப்பிரிவுக்கு மாறியுள்ளார். இந்த பிரிவு அவருக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் சாம்பியன் சரிதாதேவி மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர்களை தவிர்த்து 5 வீராங்கனைகள் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் கால் பதிக்கிறார்கள்.


இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம் வருமாறு:- மஞ்சு ராணி (48 கிலோ), மேரிகோம் (51 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ), நீரஜ் (57 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), மஞ்சு போம்போரியா (64 கிலோ), லவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), சவீத்தி பூரா (75 கிலோ), நந்தினி (81 கிலோ), கவிதா சாஹல் (81 கிலோவுக்கு மேல்)

இந்திய அணியின் பயிற்சியாளர் முகமது அலி கமார் கூறுகையில், ‘அனுபவமும் இளமையும் கலந்த அணியாக இந்தியா உள்ளது. கடந்த முறை உலக போட்டியில் நாம் 4 பதக்கங்களை வென்றோம். இந்த முறை அறிமுக வீராங்கனைகள் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கலாம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில், சபரிமலை மேல்முறையீட்டு வழக்கில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது.
2. பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - துறைமுக வழித்தடத்தில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது - 6 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களில் 2-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
4. கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஐ.பி.எல். ஏலத்தில் மேக்ஸ்வெல், லின், உத்தப்பா அதிக விலை போக வாய்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான இன்றைய வீரர்கள் ஏலத்தில் மேக்ஸ்வெல், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா அதிக விலை போக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
5. அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை - சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அறையில் நடக்கிறது
அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது. இது நீதிபதிகளின் அறைக்குள்ளேயே நடத்தப்படுகிறது.