மேரி கோம் தோல்வியுற்றதாக கூறிய நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு


மேரி கோம் தோல்வியுற்றதாக கூறிய நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு
x
தினத்தந்தி 12 Oct 2019 6:34 AM GMT (Updated: 12 Oct 2019 6:34 AM GMT)

மேரி கோமை தோல்வியுற்றதாக கூறிய நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.

உலன் உடே

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றதுடன் பதக்கத்தையும் உறுதி செய்து உள்ளனர்.

இதில் அரையிறுதியில் துருக்கியின் பஸ்னாஸ் சகிரோக்லுவுடன் மோதிய மேரி கோம் தோல்வியுற்றதால்  வெண்கலப் பதக்கம் உறுதியானது.

மேரி கோமை தோல்வியுற்றதாக  கூறிய நடுவரின் முடிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.

Next Story