ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றி


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றி
x
தினத்தந்தி 12 Nov 2019 11:09 PM GMT (Updated: 12 Nov 2019 11:09 PM GMT)

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றிபெற்றது.

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நேற்று தொடங்கியது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 16-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் நிபித்போன்-சாவித்ரீ அமித்ராபாய் இணையை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 10-21, 18-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் டெசாபோல்-சாப்ஸ்ரீ ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றில் இந்திய வீரர் சவுரப் வர்மா, தாய்லாந்து வீரர் தனோன்சாக், பிரான்ஸ் வீரர் லூகாஸ் ஆகியோரை தோற்கடித்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கு முதல் சுற்று ஆட்டம் கடினமானதாக அமைந்து இருந்தது. அவர் நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டாவை இன்று சந்திக்க இருந்தார். ஆனால் கென்டோ மோமோட்டா நேற்று திடீரென போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஆடாமலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கென்டோ மோமோட்டாவுடன் 15 முறை மோதி இருக்கும் ஸ்ரீகாந்த் அதில் 12 முறை தோற்று இருப்பது நினைவு கூரத்தக்கது.


Next Story