பிற விளையாட்டு

தடகளத்தில் சாதனை படைத்த லட்சுமணன்-சூர்யா திருமணம் + "||" + Athletic Achievement Lakshmanan-Surya Marriage

தடகளத்தில் சாதனை படைத்த லட்சுமணன்-சூர்யா திருமணம்

தடகளத்தில் சாதனை படைத்த லட்சுமணன்-சூர்யா திருமணம்
தடகளத்தில் சாதனை படைத்த லட்சுமணன்-சூர்யா திருமணம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு மேலவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.லட்சுமணன் (வயது 29 ). ஓட்டப்பந்தய வீரரான இவர் 2017-ம் ஆண்டு ஒடிசாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ராணுவத்தில் பணியாற்றும் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.


புதுக்கோட்டை வசந்தபுரிநகரை சேர்ந்த தடகள வீராங்கனை சூர்யா (29). இவர் கவுகாத்தியில் 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். சூர்யா, திருச்சியில் ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை லோகநாதன், லட்சுமணனுக்கு ஆரம்ப கால பயிற்சியாளர் ஆவார்.

இவர்கள் இருவரும் பயிற்சி முகாம் மற்றும் பல்வேறு போட்டிகளில் இணைந்து பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் லட்சுமணன்-சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் பெற்றோரும் பேசி முடிவு செய்தனர்.

அதன்படி இவர்களது திருமணம் நேற்று புதுக்கோட்டையில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலில் நடந்தது. தம்பதியை தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
2. துண்டான சிறுவனின் கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்தனர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
சேலத்தில் ஏர் கம்ப்ரசரின் சிலிண்டர் வெடித்து சிதறியதால் துண்டான சிறுவனின் கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
3. 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிகளில் அதிக ரன்கள் குவித்து கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
4. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு கால் எலும்பை கையில் பொருத்தி டாக்டர்கள் சாதனை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு கால் எலும்பை கையில் பொருத்தி அரசு டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகள் சாதனை
மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.