ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நீரஜ் இடைநீக்கம்


ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நீரஜ் இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 10:30 PM GMT)

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நீரஜ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

இந்த ஆண்டில் பல்கேரியா மற்றும் ரஷியாவில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நீரஜிடம் (57 கிலோ) கடந்த செப்டம்பர் மாதத்தில் ஊக்க மருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அவரது மாதிரியை கத்தாரில் உள்ள ஊக்க மருந்து தடுப்பு மையத்தில் சோதனை செய்ததில் நீரஜ் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. தனது தவறை ஒத்துக்கொண்ட நீரஜை உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அவரிடம் உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. விசாரணை முடிவில் அவருக்கான தடை காலம் குறித்து அறிவிக்கப்படும். அரியானாவை சேர்ந்த 24 வயதான நீரஜ் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story