பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா நியமனம் + "||" + ISL Football: Hyderabad FC The appointment of Albert Rocca as the team's new head coach

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா நியமனம்

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா நியமனம்
ஐ.எஸ்.எல். கால்பந்தில் 2020-21-ம் சீசனுக்கான ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா (ஸ்பெயின்) நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை நார்ஜரி 70-வது நிமிடத்தில் அடித்தார்.


* ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு நலநிதி திரட்டுவதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ரிக்கிபாண்டிங், ஷேன் வார்னே ஆகியோர் தலைமையிலான அணிகள் மோதும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது. இதையொட்டி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் நேற்று அளித்த பேட்டியில், ‘எங்களது பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு முந்தைய நாள் இரவு வெளியில் வந்து எந்த நேரம் பனிப்பொழிவு இருக்கிறது என்பதை கண்காணித்தார். இந்த ஆட்டத்தின் போது பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். அதற்கு ஏற்ப தயாராக உள்ளோம். பந்தை தண்ணீரில் நனைத்து பயிற்சி மேற்கொண்டோம். எப்போதும் உள்ளூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். எனவே இந்த தொடர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் 2020-21-ம் சீசனுக்கான ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா (ஸ்பெயின்) நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றைய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் அணி ஒரு விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 147 ரன்கள் (79 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி சாதனை படைத்தார். பிக்பாஷ் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’ - சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 3-வது முறையாக கோப்பையை வெல்வது யார்? - சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை பெங்களூரு அணி வீழ்த்தியது.