பிற விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி வீரர்களின் தேர்வு புத்திசாலித்தனமாக இல்லை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றச்சாட்டு-துளிகள் + "||" + First Test against New Zealand Former Indian captain Kapil Dev accused

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி வீரர்களின் தேர்வு புத்திசாலித்தனமாக இல்லை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றச்சாட்டு-துளிகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி வீரர்களின் தேர்வு புத்திசாலித்தனமாக இல்லை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றச்சாட்டு-துளிகள்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டுக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு புத்திசாலித்தனமாக இல்லை என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
* ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைய லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-தாய்லாந்து (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன.


* இலங்கைக்கு சென்றுள்ள பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்பில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஹம்பன்தோட்டாவில் இன்று நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஈ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

* நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டுக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு புத்திசாலித்தனமாக இல்லை என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடருடன் ஒப்பிடும் போது அணியில் நிறைய மாற்றங்களை செய்து கிட்டத்தட்ட புதிய அணியாக களம் இறக்கியது ஏன் என்பது புரியவில்லை என்று கூறியுள்ள கபில்தேவ், நல்ல பார்மில் உள்ள லோகேஷ் ராகுலை டெஸ்ட் அணியில் சேர்க்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

* ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.