ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் கவுரவ் சோலங்கி, ஆஷிஷ் குமார் வெற்றி


ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் கவுரவ் சோலங்கி, ஆஷிஷ் குமார் வெற்றி
x
தினத்தந்தி 3 March 2020 11:58 PM GMT (Updated: 3 March 2020 11:58 PM GMT)

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர்கள் கவுரவ் சோலங்கி, ஆஷிஷ் குமார் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

அம்மான்,

ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி, கிர்கிஸ்தான் வீரர் அகில்பெக் இசென்பெக் உலுவை சந்தித்தார். தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட கவுரவ் சோலங்கி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் கான் சியா வெய்யை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறும் வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story