பிற விளையாட்டு

அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி + "||" + All-India Basketball: Tamil Nadu in the final

அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி

அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி
அகில இந்திய கூடைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதிபெற்றது.
சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 44-வது அகில இந்திய மின்வாரிய அணிகள் இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேரளா அணி 67-29 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரைஇறுதிப்போட்டியில் தமிழக அணி 66-58 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தமிழக அணியில் சிவக்குமார் 39 புள்ளியும், ரவிச்சந்திரன் 11 புள்ளியும் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலை 7 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியானா-பஞ்சாப் அணிகள் சந்திக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
2. அகில இந்திய கூடைப்பந்து: தமிழக மின்வாரிய அணிக்கு 2-வது இடம்
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், தமிழக மின்வாரிய அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.
3. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி நிதான ஆட்டம்: வசவதா சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது. அந்த அணி வீரர் அர்பித் வசவதா சதம் அடித்தார்.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.