பிற விளையாட்டு

என்னையும், விராட்கோலியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்: பாபர் அசாம் + "||" + Virat Kohli a different type of player: Pakistan captain Babar Azam reacts to comparisons

என்னையும், விராட்கோலியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்: பாபர் அசாம்

என்னையும், விராட்கோலியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்: பாபர் அசாம்
என்னையும், விராட்கோலியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது பேசுகையில், ‘நான் சந்தித்ததிலேயே ரிக்கி பாண்டிங் தான் மிகவும் சிறந்த பயிற்சியாளர். கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு நான் திரும்புகையில் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஏறக்குறைய ஒரு அறிமுக வீரர் போலவே உணர்ந்தேன். பயிற்சி முகாமுக்கு முதல் நாள் வருகையில் அவர் எனக்கு நிறைய நம்பிக்கை அளித்தார். நீங்கள் சீனியர் வீரர், இளம் வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் நீங்கள் தான் எனது முதல் தேர்வு’ என்று தெரிவித்தார்.

* பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அளித்த ஒரு பேட்டியில், ‘என்னையும், விராட்கோலியையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு வகையான வீரர்கள். எல்லாநேரங்களிலும் களம் இறங்குகையிலும் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நான் பாடுபடுகிறேன். பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவது ரசிகர்களுக்கும், எங்களுக்கும் சிறந்ததாக இருக்காது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முழுமையான உறுதி அளித்தால் மட்டுமே வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று விளையாடும்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. “உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி” - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் புகழாரம்
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலிதான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
2. ‘கேப்டன் பொறுப்பில் விராட்கோலி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்’ - நெஹரா கருத்து
‘கேப்டன் பொறுப்பில் விராட்கோலி இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது இருக்கிறது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா தெரிவித்தார்.