பிற விளையாட்டு

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை - காஷ்யப் கருத்து + "||" + Don't think any tournament will happen till a vaccine is found: Parupalli Kashyap

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை - காஷ்யப் கருத்து

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை - காஷ்யப் கருத்து
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்யப் அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படும் வரை உலகம் முழுவதும் பெரிய விளையாட்டு போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எல்லோரும் சந்தேகத்துடனும், ஒருவித பயத்துடனும் தான் உள்ளனர். பயணக்கட்டுப்பாடு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை. கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்பது தெரியாததால் விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் முடிவு எதுவும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றன’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்பு பேட்டி
கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? என்பது குறித்து டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்துள்ளார்.